பக்கங்கள்

வியாழன், 25 நவம்பர், 2010

கணித நாடகம்

கலாச்சாரத் திருவிழா 2010
கணிதம் சார்ந்த தலைப்பிலான மேடை அரங்கேற்றம்
கணிதம் என்ற உடன் என்ன செய்வது என்று பலமான யோசனைகள் அதன் முடிவாக இப்படி ஒன்றினை செய்தால் நன்றாய் இருக்கும் என்று பல்வேறு விதமான சிந்தனை எழுச்சிகள் என் உள்ளே....
முடிவாக பழையவிதமான யோசனையே வெற்றியடையும் என்ற சிந்தனையிலான ஒரு பிரதிபலிப்பே இந்த கதையும் கருத்துமாகும்..
இப்படியொரு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது இவ்விதமாக யோசியுங்களேன் என்று நான் மற்ற நண்பர்களிடம் றியும் அவர்களால் யோசிக்க முடியவில்லையா அல்லது யோசிக்க மனம் இல்லையா என்பதே எனக்கப் புரியவில்லை...
ஏதே நம்மீதே பாரமேற்றப்பட்டுள்ளது என்று மற்றவர்கள் என்னினாலும் பாரம் எனக்கு பழக்கப்பட்டதே என்பது அவர்களுக்கு தெரியாது போலும் சரி சரி  நாம் நமது வேளையினைத் துவங்குவோமென துவங்கி விட்டேன்...

என் கற்பனைச் சிறகுகளை உதறி பறக்கத் துவங்கிவிட்டேன் என் கற்பனை உலகத்தினில்...
இதற்கு எனக்கு பலமான ஆதரவினை தருபவர்கள்...
இரண்டு, மூன்று வேற்றுகிரக வாசிகள் தங்களின் கிரகத்தினில் மொழியினைத்தவிர வேறெந்த துறையிலும் வளர்ச்சியடையாத காரணத்தினைத் தேடி பூமிக்கு வருகின்றனர். அவர்களுக்கு எந்த மொழியும் தெரியும் அதாவது அவர்கள் எந்த மொழியினையும் புரிந்துக்கொள்ளக்கூடிய ஆற்றலையும் மனிதனின் கண்களுக்கு புலப்படாத ஆற்றலினையும் கொண்டவர்களாக உள்ளனர்.  அவர்கள் புமிக்கு வருவதற்கான காரணமே தங்களின் கிரகத்தினில் மொழியைத் தவிர வேறு எதிலும் வளர்ச்சியடையாத்தன் காரணத்தினை அறிந்துக்கொள்வதற்காகவே...
முதலில் அவர்கள் வந்தடைந்தவுடன் அவர்கள் தாங்கள் எங்கே வந்தடைந்துள்ளோம் என்பதை அறிய முயல்கிறார்கள் விளைவுகள் கற்பனைக்கு உட்பட்டவை.  அதாவது சமுகத்தினில் நடக்கும் அவலங்களை பார்த்து அவர்களாகவே ஒருமுடிவிற்கு வருவதாக செயல்படுத்தலாம் . உதாரணமாக ஊழல் சமுகஅவலம் அரசியல் நாடகங்கள் சோம்பேறித்தனம் மற்றவர் முன்னேற்றத்தினை தடுக்கிற செயல்கள் பேருந்தில் கூட்ட நெரிசல் போன்ற பல சமுக முறைகேடுகளை பார்த்து அவர்களாகவே ஒரு முடிவிற்கு வருகின்றனர்.  பின் அந்த வட்டாரத்திற்கேற்ப புரிந்துக்கொள்ளும் திறனை பெற்று யார் கண்ணுக்கும் தெரியாதபடி உலவுகின்றனர் தாம் வந்த பணியினை செய்ய..
அவர்களின் உலகினில் எந்த ஒரு அறிவியல் முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் அவர்கள் நடந்து வந்த்தாகவும் அவர்களுக்கு ஆயுள் ஆயிரம் ஆண்டுகள் எனவும் கற்பனை செய்ய பட்டதன் பேரில் முதலிலேயே அவ்வாறு அறிவிக்கப்படுகின்றது.

பிறகு இந்த உலகினில் எப்படி மொழியினைத்தவிர மற்ற துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளது என்பதனை அறிய அவர்கள் சுற்றும் வேளையில் இவை அனைத்திற்கும் முழு முதல் காரணமாய் அமைவது கணிதம் என்பதை அறிந்து பிரமித்து அதை மனிதர் அறியாமல் கற்று தன் கிரகத்தினை சென்றடைந்து மனிதனை விட பல மடங்கு முன்னேற்றம் காண்கின்றனர் காரணம் மனிதனிடம் உள்ள சோம்பல் என்றும் முடிக்கலாம் ஆனால் அது நமது கூற விழையும் கருத்து அல்லவே எனவே முடிவாய் கூற நினைப்பது கணிதம் தான் அனைத்திற்கும் அடிப்படை என்றும் அதை நாம் விழிப்புடனும் விடாமுயற்சியுடனும் ஆர்வத்துடனும் கற்க வேண்டும் என்பதே.

எனவே இதனை கூற நாம் பின்வரும் வழி முறைகளை உற்று நோக்குவோம்.

நாம் கணித்தினை எவ்வகையில் கற்கிறோம் பள்ளி பருவம் முதற்கொண்டு நாம் கணித்தினை ஏதோ வாழ்விற்கு பயன்படாத ஒரு பொருளாக அதாவது பொருளற்ற பொருளாக எண்ணி நாம் அதனை கற்று வருகிறோம் காரணம் தொடக்க கல்வி முதற்கொண்டு ஒன்று என கற்பிக்கத் தொடங்கும் ஆசிரியர் ஒன்று என்பது இது தான் என்பதனை பார்வைக்கு புலப்படுத்தாமல் கற்றுதருகிறார் விளைவு ஒன்று எனபது ஒரு மொழிபோல நமக்கு தோன்றிவிடுகிறது ஆனால் அவர் அன்று ஒரு பொருளை எடுத்து இதன் எண்ணிக்கை ஒன்று எனக்கூறியிருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும் இதுதான் கணித்தில் உள்ள மிகப் பெரிய சவால்.

சிறு சிறு விசயங்களில் துவங்கி கண்ணை கட்டி காட்டில் விட்டபடியாகி விடுகிறது கணித்தினை பொறுத்தமட்டில். 
ஒருவன் கணித்தினை கற்க வேண்டுமானால் அவனுக்கு நிச்சயமாக இரண்டு காரணிகள் மிகவும் முக்கியமானவை.
1.புறக்காரணியாக ஆசிரியரின் கற்பிப்பு
2. அக காரணியாக கணித்தின் மீதான அவனது பற்றுதல்

இவை இரண்டில் ஒன்று விடுபட்டாலும் அவனின் கதை கணித்தில அதோகதிதான்.
நாம் கணிதம் கற்கிறோம் என்றுதான் பெயர் ஆனால் கணித்தினை முறையாக கற்பதில்லை சாதாரண கூட்டல் கணக்கினை கூட கூட்ட நாம் நாடுவது அலைபேசியையோ அல்லது கணிப்பானையோதான்.  இவ்வகையான நிலைவர காரணம் நம்முடைய மேற்கூறப்பட்ட கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள்தான் எனலாம்.
இன்றைக்கு கூட மேல்வகுப்பில் வந்தும் பலர் கணித்தினைகூட மனனம் செய்து எழுதி தேர்வினில் தேர்ச்சியடைந்து வாழ்வினில் தோல்வியடைந்துவிடுகின்றனர். சாதாரணமாக மல்லிகைக்கடைக்காரன் மற்றும் பணத்தொழிலினை செய்பவர்கள் அறிந்த கணிதம் கூட கணிதம் கற்றவனுக்கு தெரிவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இவ்வகையாக ஒருபுரம் இருக்க கணித்திலேயே தன் அறிவினை செலுத்தி சமூகத்தினை மாற்றியமைப்பவர்களும் உண்டு. உதாரணமாக நமது கதையிலும் ஒருவன் வகுப்பறையில் காகிகத்தினை முக்கோணமாக மடித்து அதில் ராக்கெட் செய்கிறான் ராக்கெட்டின் முனை கூறாக இருந்தால் தான் காற்றினை கிழிக்கும் என்றொரு சேதி அங்கு.
வேதியல் பாடவேளையில் முதல் சுற்றுவட்டம் இரண்டாம் சுற்றுவட்டம் இத்தனை எண்ணிக்கையிலான எலக்ட்ரான்கள் புரோட்டான்கள் எனக் கற்பிக்கையிலும் கணிதம் பயன்படுவதாய் தெளிவு.
கணிப்பொறியில் இரண்டு எண்களான சுழி மற்றும் ஒன்று இதனை பயன்படுத்தியே கணிணியின் மொத்த செயல்களும் அமைக்கப்படுகின்றன என்பது.
சமையலில் ஒரு மேஜை கரண்டி உப்பு இரண்டு மிளகாய் என அங்கும்.
விவசாயத்தில் நிலத்தின் பரப்பளவு நீர் பங்கீடு உர உபயோகம்.


கணிதம் என்பது காதல் போல
அதை உணர்பவர்களுக்கு மட்டுமே அது புரியும்.
கணித்தில் சுழியையும் இடமதிப்பையும் கண்டறிந்தவர்கள் இந்தியர்கள்.
ஆடு மேய்த்தலில் ஆடுமேய்ப்பவர் கூட கணிதம் அறிந்தவராக இருக்கிறார்.
டீக்கடையில் கடைக்கார் கணக்குவழக்குகளை கவனிப்பது.
1 பக்கத்தில் நுறு சுழிகள் இட்டால் அது கூகுள் எனப்படும்
எட்டு எட்டா மனிதன் வாழ்வை பிரிச்சிக்கோனு பாட்சா பட பாடலுக்கு நடனம்.
அரசியல் சம்பந்தமான ஊழலினை கூறுதல் சால்வையில் காமன்வெல்த் ஒருபக்கம் பெக்ட்ரம் ஊழல் ஒருபக்கம்.  அரசியல் வாதிகள் வருவது பட்டாசு வெடித்து.
அலுவர்கள் தங்களுக்குள்ளாக சதவீத்த்தினை பகிர்ந்துக்கொள்ளுதல்.
குடிசை பலஅடுக்கு மாடிகள் வித்தியாசம் காரணம்.

கணிதம் என்பது மரத்தின் வேர்போல அது பல துறைகளில் மறைமுகமாகப் பயன்பட்டாலும் அது மற்றவர்களுக்கு தெரிவதில்லை இதை சொல்லும் விதமாக ஒரு மர மாதிரி.